000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a விஷ்ணு துர்க்கை |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a வடபுறக் கோட்டத் தலைவியாகிய தாய்த் தெய்வம் விஷ்ணு துர்க்கை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a துர்க்கா தேவி பீடத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது காலை தளர்த்தி வைஷ்ணவ நிலையில் ஆறு கரங்களுடன் நிற்கிறார். பத்ர பூரிமத்துடன் விளங்கும் கரண்ட மகுடராய், நெற்றிப்பட்டை இலங்க, செவிப்பூ அணிந்து, நீள் செவிகளில் மகர குண்டலங்கள் துலங்க, கால்களில் வீரக்கழல்கள் அணிந்து வீரத்தின் அதிதேவதையாய் நிற்கின்றார். மூவிரு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அபய முத்திரை, இடையில் வைத்த கடி முத்திரை ஆகியவற்றை கைக் கருவிகளாகக் கொண்டுள்ளார். கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள் வளை, கடக வளை, முன் கைகளில் செம்பொற் வளை, விரல்களில் வளையங்கள் ஆகியன செம்மையுறுகின்றன. வீரத்தின் விளைநிலமாய் அன்னை பகைமையை அழிக்கும் முகத்தான் போர்க் கோலத்தில் நின்றிருந்தாலும், அமைதி தவழும் எழில் முகத்தை பெற்று விளங்குகின்றார். |
653 | : | _ _ |a துர்க்கை, விஷ்ணு துர்க்கை, கொற்றவை, தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000356 |
barcode | : | TVA_SCL_000356 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |